பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i43 பணப்பெருக்கம் அந்தப் பணத்தை விட ஈட்டத்தகுந்த பொருள் வேறு இல்லை. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் {751) என்பது வள்ளுவர் வாக்கு. இத்தகைய பெருமையைத் தரக்கூடிய பணத்தின்மேல் ஆசை கொண்டு அதனை எப்படித் திரட்டலாம் என்று சிலர் ஆலாய் பறந்து திரிவதைக் காணலாம். என் தாயார் பிறந்த பிரகம்பி திருச்சி மாவட்டம் இலால்குடிவட்டம் என்ற சிற்றூரில் ஒரு செட்டியார் குடும்.ம். அவருக்குச் சமயபுரம் திருச்சி அருகில் உள்ளது பக்கம் ஏராளமான சொத்து இருந்தது. அவர் குடும்பத்தில் ஒருவரும் எச்சில்கையாலும் காக்கை ஒட்ட மாட்டார்கள். அவ்வளவு வள்ளல் தன்மை. அக்காலத்தில் அக்குடும்பத்தை ஊர்ப் பெருமக்கள் பணக்கார செட்டியார் வீடு' என்று மிகப் பெருமையுடன் பேசுவார்கள். மலருக்குள்ள உண்மையான மணம் வீசுவது போல, அவரிடமுள்ள பணத்திற்குப் 'பொய்யான மணம் வீசுவதை அக்காலத்தில் யான் காணும் மனப்பக்குவம் இல்லாவிடினும் இப்போது நினைந்து காண்கின்றேன். பணம் இல்லாத ஏழைகளை எல்லாரும் இகழ்வார் கள். பொதுமக்கள் அத்தகையவரை வெங்கள்" என்று பெயர் சூட்டிக் கிண்டல் செய்வார்கள். பணம் இருக்கும் செல்வரை பண இருப்பு ஒன்றையே காரணமாகக் கொண்டு ஈகைக் குணம் எள் அளவு கூட இல்லாதிருந்தும் கூட அவருக்கென்ன குறைவு? கை நிறையக் காசு இருக்கிறது என்று சொல்லி மகிழ்வார்கள். இல்லாரை எல்லாரும் எள்ளுவர்:செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு (752) என்பது வள்ளுவரின் பொய்யாமொழி,