பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重鸣9 உணவும் மருந்தும் இன்று நாக்கு இயற்கை உணர்வினால் ஆளப்படும் தன்மை குறைந்து மனிதனுடைய விருப்பு வெறுப்பினால் ஆளப்படும் தன்மை மிகுந்துள்ளது. இதனை நன்குச் சிந்தித்து உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய இன்றியமை யாமையைக் கருத்தில் இருத்த வேண்டும். இதனால் உடல் நலம் பேணல் தானாக அமைந்து விடும். உணவையே மருந்தாக எண்ணி உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபட்டோர் நோயற்றவராக செழி வேண்டும் என்பதும் நோய் வந்தாலும் அதனை உடனே போக்கி கொள்ள வழி காண வேண்டும் என்பதும் வள்ளுவர் பெருமானின் எச்சரிக்கையான அறிவுரை, மருந்து என்ற அதிகாரத்தில், "மருத்தென வேண்டளவaம் பாக்கைக்கு” (342) என்று ஒரு போடு போடுகின்றார். முதல் ஏழு குறள்களும் 4ே1 947 மருந்து வேண்டாத வாழ்க்கையை வற்புலுத்துகின்றன. ஆனால் இந்த நெறி மிக மிக அரிய நெறி என்பதையும். இதனை எல்லோராலும் எல்லாக்காலங்களிலும் கடைப் பிடிக்க இயலாதது என்பதையும் உணர்ந்து அதற்குக் கழுவாயாக தீர்க்கும் முறைகளை இறுதி மூன்று குறள்களில் 1948-950 தெரிவிக்கின்றார். பழங்காலத்து முறைப்படி ஒருவருக்கு உறும் நோய் இன்னது என்பதை நாடிபார்த்துக் காணும் முறை ஒன்றி ருந்தது. அவ்வாறு காணும்போது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்றும் மிகாமலும் குறையாமலும் இயற்கையான அளவில் இருப்பின் நோயற்ற நிலை என்று உறுதி செய்யப் பெற்றது.