பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選5誌 உணவும் உருத்தும் செய்து கொண்டு அதன் பிறகு அந்த அளவு உணவை உண்ணவேண்டியது கடமை. அதுவே உடம்பைப் பெற்றவன் அந்த உடம்பை நெடுங்காலம் காத்துச்செல்லும் வழியாகும். அற்றால் அளவறிந்து உண்க: அஃது உடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு (945) என்பது அற்புதமான பொய்யாமொழி. முன்னர் சொன்ன கருத்திற்கு இக்கருத்து புத்தொளிவீசி நிற்பதைக் கண்டு மகிழலாம். முன் உண்ட உணவு எவ்வாறு செரித்தது என்று செரிமானம் ஆன தன்மையை ஆராய்ந்து, அதனால் தெளிந்த உண்மையைக் கடைப்பிடித்து மாறுபாடு விளைவிக்காத உடம்புக்கு ஒத்துக் கொள்கிற உணவையே தெரிந்து உண்ண வேண்டும். அதையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும். அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து (944) என்பது வள்ளுவப் பெருந்தகையின் வான்புகழ் உண்மை, துவரப் பசித்து' என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பசித்துப் புசி என்ற பாட்டியின் வாக்கையும் பன்முறை சிந்திக்க வேண்டும். இங்ங்ணம் தனக்கு உகந்த மாறுபாடு இல்லாத உணவையும் தன் மனம் விரும்பும் அளவும் உண்ணமறுத்து உடலுக்குத் தேவையான அளவே உண்ண வேண்டும் . அவவாறு உறுதி செய்துகொண்டு உண்டால் உயிர் வாழ்க்கையில் நோயால் வரும் இடையூறு தலைக்காட்டாது. 1. செரிமானம் பற்றி பல ஆங்கில நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்தைப் படித்துப் பயன் பெறலாம். வ. வா. சி - 12