பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 உணவும் மருந்தும் "பிணி' என்றார் வள்ளலார். அந்த நோய்க்கு மருத்தாகிய உணவை வழங்குபவர் பசிப்பிணி மருத்துவர் எனப்பட்டனர். ாண்டு வள்ளுவர் பெருமான் பசியை தீ என்கின்றார். இந்தத் தீயின் அளவை அறுதியிட்டு அதனை அவிப்பதற்கு வேண்டிய உணவின் அளவையும் உறுதி செய்து அதனை உண்டு அத்தீயை அணைக்க வேண்டும். இவ்வாறு விழிப்புடன் உணவு முறைகளைக் கையாண்டு வாழ்ந்தாலும் நோய் வரத்தான் செய்கின்றது. அவ்வாறு வந்த நோயை எவ்வாறு தீர்ப்பது? அதற்கும் வளள்ளுவர் பெருமான் வழி சொல்லுகின்றார். யாருக்கு? நோய் தீர்க்கும் மருத்துவருக்கு. அவர் வந்த நோய் என்ன நோய் என்று ஆராய்ந்து அந்த நோய் என்ன காரணத்தால் வந்தது என்று உறுதி செய்து அதனைத் தனிக்கும் வழி என்ன என்று உறுதி செய்து பொருத்தமான முறையைக் கையாள வேண்டும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (948) என்பது வள்ளுவர் பெருமானின் பொய்யாமொழி. இதற்குமேலும் மருத்துவர் செய்ய வேண்டிய வற்றைச் செப்புகின்றார். மருத்துவர் தம் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் நோயாளியின் உடல் நிலைமை நோயின் வலிமை' நோயாளியின் வயது முதலியவை. நோயின் தன்மை நோயைத் தீர்ப்பதற்கு உரிய காலத்தின் வாய்ப்பு ஆகியவற்றை யெல்லாம் ஆராய்ந்து தெளிந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் (949) என்பது மருத்துவருக்கு இன்றியமையாத வள்ளுவம். இங்ஙனம் உணவும் மருந்தும் பற்றிய வள்ளுவர் பெருமான் வகுத்த வழி முறைகளை நாம் ஒரளவு அறிந்து தெளிந்தோம்.