பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 15 தன்னலமற்றப் பணியை தமிழ்நாடு முழுதும் அறியும். ழ்த்துறையை நிறுவ நான் 9 ஆண்டுகள் பட்ட பாட்டை 露 தமிழகத்துத் தலைமைச் செயலகம் நன்கு அறியும். இறையருளயால் அங்குப் பணியாற்றிய முத்துப் பிள்ளை என்டாரின் துணையால் முயற்சி பழம் ஆயிற்று. என்னை நன்கு அறிந்த நல்லவர் ஒரு துணைவேந்தர் தேர்வுக்குழுவில் இருந்து கொண்டு பேராசிரியர் பதவி உயர்வுக்குத் தடைக்கல்லாக நின்றவர். இறுதிக்காலத்தில் புற்று நோயால் இறந்தார். அவர் குழுவில் இருந்து துணையாக நின்ற பேராசிரியர் பல்கலைக் கழகத்துணைவேந்தராக உயர்ந்து நாடு புகழ வாழ்ந்து மறைந்தார். எனக்குத் தடைக்கல்லாக நின்ற பிறிதொருவர் பதவி உயர்வுக்குப் பாடுபட்டதனால் அவரை என்னுடன் பதவியாற்ற உதவினர். இவர் வந்த நாள் தொட்டு தாமே முற்றும் கற்ற அறிஞர் என்று தன்னையே மெச்சும் தவிட்டுக் கொழுக்கட்டை போல் மெச்சி வாழ்ந்த அன்பர். இவர் பல ஆண்டுகள் சொல் லொணாத் தொல்லைகள் விளைவித்ததைத் திருப்பதியில் அறியாதார் இவர். இலர். தமது 58-வது அகவையில் இரத்தக் கொதிப்பினால் காலமானார். அவரது தீய எண்ணமே இரத்தக் கொதிப்புக்கு காரணம் என்று பல்கலைக் கழக வட்டாரம் பேசிக் கொண்டது. ஓய்வு பெற்று சென்னை வாழ்க்கையில் பல்வேறு பதவிகளை ஆற்றி பல்வேறு துறைகளில் 123 நூல்களின் ஆசிரியனாக நாடெல்லாம் புகழும் நிலையில் வாழ்ந்து வருகின்றேன். சென்னையில் என் பல்கலைப் பணியில் பொறாமை காரணமாக இருவர் தொல்லை விளைவித்துக் கொண்டுள்ளனர். ஒருவர் ஒய்வு பெற்றார். மற்றொருவர்