பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ஆக்கம் கருதி முதல் இழத்தல் அறம் பொருள் இன்பங்கட்கு இடையீடாக இருப்பது சூதாட்டம். அது ஆக்கம் கருதி முதல் இழக்கும் செயலாகும். ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்(463): என்பது வள்ளுவம். இது பிறிதோரிடத்தில் கூறப் பெற்றதாயினும் சூதாட்டத்திற்குப் பொருத்தமான அறிவுரை யாக அமைகின்றது. வள்ளுவப் பெரும்ாளின் அறிவுரை - அறவுரை - அவர்தம் அறநூலில் எல்லா இடத்திலும் காணப்பெறும். சூதாட்டம் அறிவைக் கெடுக்காவிட்டாலும் கடமையைப் புறக்கணிக்கச் செய்து விடும். ஆகவே அதுவும் பொது வாழ்க்கைக்கு இடையூறானது. தனி வாழ்க்கைக்காவது நன்மை தருவதாக அமைகின்றதா என்று ஆராய்ந்தால் அதில் 'சூதாட்டத்தில், வெற்றி உண்டு என்று கூறலாம். ஆனால் வென்று பெறும் பொருள் மேல் வரும் இழப்புக்கும், அதனால் கிளைக்கும் துன்பத்திற்கும் ஏதுவாகும். அஃது உண்மையான ஊதியம் அன்று அதன் விளைவு துண்டில் இரும்பை இரை என்று கருதி துண்டியில் வைக்கப் பெற்றிருக்கும் புழுவை இரை என்று மயங்கி விழுங்கிய பிறகு மீன் அல்லற்படுது போல் ஆகும். திெ செயல்வகை (அதி.41)-1