பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 誤62 சூது என்பது பெரியம்மை மூதேவி தான் அதற்கு இரையானவர்கள் வயிறார உண்ணவும் மாட்டார்கள். அல்லலும் அநுபவிப்பார்கள் (936), உள்ள காலம் எல்லாம் சூதாடும் இடத்தில் செலவாகுமானால் பெற்றுப் பழகிவந்த செல்வத் தையும் அரசியல் பதவி முதலியவற்றையும் கெடுக்கும். நல்ல பண்புகளையும் கெடுத்து விடும் 1937. உள்ள பொருளைக் கெடுப்பது மட்டு மல்லாமல் பொய்யை மேற்கொள்ளும் படியாகச் செய்து அருள்நெறியையும் மறக்கச் செய்து துன்பம் உறச் செய்யும் 1938) சுருங்கச் சொன்னால் சூதாட்டத் தை விரும்பி மேற்கொள்வோர்.செல்வம், மதிப்பு. கல்வி, உணவு, உடை என்னும் ஐந்தையும் இழந்து அல்லலுற வேண்டிவரும் 1939 இவற்றையெல்லாம் நமக்கு அறிவுறுத்திய வள்ளுவப் பெருத்தகை சூதாட்டத்தில் ஈடுபடாமல் மிகமிக விழிப்பாக இருந்து விலக வேண்டிய காரணம் ஒன்றையும் காட்டி ள்சசரிக்கின்றார். அளவற்ற கவர்ச்சியுடையது சூது. துன்பம் படப்பட உடலுடன் வாழும் வாழ்க்கை உயிருக்கு ஆசை வளர்வது நம் அநுபவம். அதுபோல் பொருளை இழக்க சூதாடுகிறவர்க்கு சூதின்மேல் ஆசைவளரும்; இப்படிபட்ட கவர்ச்சி சூதுக்கிருப்பதால் விழிப்புடன் இருந்து விலக வேண்டும் என்பது அவருடைய எச்சரிக்கை. இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர் (940) என்பது கலங்கரை விளக்கம்போல் அவர் தந்த பொய்யா மொழி.