பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 盘88 முறை வேரூன்றி விட்ட பிறகு இயற்கை ஆற்றல் அழிவு பட்டது. ஆகையால் இன்று ஏற்ற உணவையும் ஏலாத உணவையும் உணர்ந்து அறிவிக்கும் ஆற்றல் நாக்கிற்கு இல்லை. இன்றும் குழந்தைகளிடத்திலும் சில வகை நோயாளி களிடத்திலும் அந்த ஆற்றல் ஒருவாறு அமைந்திருத்தலை உய்த்து உணரலாம். உடலுக்கு ஏலாத பொருள்களை அவர்கள் காரணம் இல்லாமல் விலக்கு கிறார்கள். ஆயினும் உடலுக்கு ஏலாத சில பொருள்களை விரும்பவும் செய்கின்றார்கள். உடல் கெடும் என்று பிறர் சுட்டிக் காட்டியும் கேளாமல் விரும்பு கின்றார்கள். அதனால் அந்த இயற்கை ஆற்றல் இன்று நாக்கிற்கு உள்ள அளவு போதாது நம்பத்தகாதாகவும் உள்ளது இன்று நாக்கு இயற்கை உணர்வினால் ஆளப்படும் தன்மை குறைந்து மனிதனுடைய விருப்பு வெறுப்பினால் ஆளப்படும் தன்மை மிகுந்துள்ளது. ஆயினும் இன்றும் உடம்பில் மற்றோர் உறுப்பு அந்த ஆற்றலை இழக்காமல் காத்து வருகிறது. அது மனிதனுடைய விருப்பு வெறுப்புக்குக் கட்டுப்படாமல் வேலைசெய்து வருகின்றது. அதுதான் வயிறு தர்மாத்மா போல் உள்ளது. அஃது ஒன்றே இன்றும் நம்பத்தகுந்ததாக உள்ளது. தக்க உணவை நன்கு செரித்து, தகாத உணவை நன்கு செரிக்காமல் தள்ளுகின்றது. மனிதன் ஆசைவயப் பட்டவனாய்த் தகாத உணவையே திணித்து வற்புறுத்து வானானால் அதற்காக அந்த வயிறு மாறி அமைவதில்லை. மனிதனுக்கு அடிமையா வதில்லை. வேலை செய்ய மறுக்கிறது. திணிப்பும் வற்புறுத்தலும் மேலும் மிகுமானால் செரிப்புக்கு மருந்து முதலியவை உண்டு வற்புறுத்தினால் மறுக்கும் நிலைமையும் கடந்து மானமுள்ளவர் போல் தானே கெட்டு அழிகின்றது. ஆகவே அது நன்றாக