பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 470 உடம்புக்கு ஒத்துக் கொள்ளுகின்ற மாறுபாடு இல்லாத உணவையும் மனம் விரும்பும் அளவும் மறுத்து உடலுக்குத் தேவையான அளவே உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் உயிர் வாழ்க்கைக்கு நோயால் நேரும் இடையூறு இல்லையாகும். மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945) என்ற குறட்பாவில் இக்கருத்து பொதிந்திருப்பதைக் கண்டு உவக்கலாம். உடலுக்குத் தேவையான உணவு இன்னது என ஆராய்ந்து தேர்ந்து எடுத்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்கின்றவனிடம் இன்பம் உடல்நலம் நிற்கும் அது போல மனத்தின் விருப்பதிற்கு இயைந்து அளவு மீறி மிகுதியாக உண்கிறவனிடம் நோய் குடியேறி நிற்கும். இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழியே ரிரையன்கண் நோய் (946) என்ற குறளின் ஒளியில் இக்கருத்து அடங்கியிருத்தல் காணலாம். - பசித்தீயின் அளவிற்கு ஏற்றவாறு உண்ணவேண்டும். அங்ங்னம் உண்ணாமல் ஒன்றையும் ஆராயாமல் அளவு மீறி மிகுதியாக உண்டால் நோயும் அளவு கடந்து தலைக்காட்டும் இக்கருத்து, தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோயளவு இன்றிப் படும் (947)