பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量了萝 நோயற்ற வாழ்வு f -: 3. S S TST S AAAAA SAAAA T ttt StttS ي يج بب و இவற்றையெல்லாம் மீறி ஒருக்கால் நோய் வந்து விட்டால் அந்த நோயைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுட்டுகின்றார். வந்த நோய் என்ன நோய் என்று ஆராய வேண்டும் அஃது என்ன காரணத்தால் வந்தது என்பதை நாடி அறிய வேண்டும் அதனைத் தணிக்கும் வழி என்ன என்பதை அறிய வேண்டும். இதன் பிறகு அதனைப் பொருத்தமான முறை அறிந்து பிழையாமல் செய்ய வேண்டும். இதனை, நோய்தாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (948) என்ற குறட்பாவில் கண்டு தெளியலாம். வதற்கு முன் நோயாளியின் உடல் நிலைமை, அதன் வலிமை, அவனது வயது முதலியவைகளையும், நோயின் தன்மையையும் அதனைத் தீர்ப்பதற்கு உரிய காலக்கின் வாய்ப்பையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். கால வாய்ப்பு என்பது பெரும்பொழுது, சிறு பொழுது என்பவை. இவற்றில் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையால் இவற்றின் பொருத்த முறையை ஆராய்தல் இன்றியமையாதது.