பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 மானமிகு வாழ்க்கை மானம் இழந்தும் உயிர்வாழ முடியும். ஆனால் இறவாத நிலை பெற முடியாது என்பதை நாம் அறிவோம். ஆதலால் மானமும் அழிந்து உயிரும் அழிவதால் பயன் ஒன்றும் இல்லை. ஏதேனும் ஒன்றைக் காத்தல் புத்தி சாலித்தனமாகும். உயிரை நெடுங்காலம் காக்க முடியாது. அதனால் அதை இழந்தாவது மானத்தைக் காக்க வேண்டும் உடம்பை எப்படியாவது காக்க வேண்டும் என்று மானம் அழிந்து வாழும் வாழ்க்கை சாகாமல் இருப்பதற்கு மருந்தாகப் பயன்படாது என்பதை உணர்ந்தால் போதும். அவ்வாறு உணர்ந்தவர்கள் மானத்தைக் காப்பதற்காக உயிர்விட வேண்டிய நிலைமை வந்தாலும் மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் போல் உயிர் விடுவார்கள். மயிர்நீப்பின் உயிர்வாழக் கவரிம அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (969) என்பது இந்நிலையை விளக்க வந்த வள்ளுவம் இழிநிலை வந்தபோது உயிர் வாழாமல் இறந்த மான முடையவர்களின் சிறப்பை உலகம் தொழுது வாழ்த்தும். "ஒளி தொழுது ஏத்தும் உலகு (970).