பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பண்புடையார் உலகம் பண்புடைமை என்பது பாடறிந்து ஒழுகல் என்பது கலித்தொகையில் கண்ட உண்மை. பண்புடையார் இருப்ப தால்தான் உலக வாழ்க்கை உண்டு என்று சொல்லக் கூடியதாய் நடைபெற்று வருகின்றது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மாண்புக்கு மாய்வது மன்(996) என்பது பொய்யா மொழி. மக்கட் பண்பு என்றால் என்ன? நீதியையும் அறத்தையும் விரும்பும் தன்மை ஆகும். இவற்றை விரும்புகின்றவர்களே உலகிற்குப் பயன்படுவார்கள் அவர்களுடைய பண்பையே உலகமும் பாராட்டும். நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புடா ராட்டும் உலகு (994) என்பது இக்கருத்தைக் காட்டும் வள்ளுவம். உலகம் தோற்றத்தால் மண்ணும் கல்லுமாய் உள்ளது. மற்ற பூதங்கள் இருப்பினும் மண்ணே அதன் புறத்தோற்றத்திற்குக் காரணமாக உள்ளது. மற்றப் பூதங்கள் இருப்பதைவிட மற்ற உயிர்கள் இருப்பதைவிட மக்கள் வாழ்வதே மண்ணுலகத்தின் சிறப் புக்குக் காரணமாக உள்ளது மக்கட்பண்பு இல்லாமல் விலங்குகளைப் போல், மரங்களைப்போல் மககள் வாழ்க்கை நடத்தினால் ஒருவரையொருவர் கொன்று அழித்துவிட இறுதியில் வெறும் பாழான மண்ணுலகமாய்த் தோன்றி அழிந்து விடும்.