பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் i8O மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள் மரம் போனறவர் களே கண்ணில் ஒரு பகுதி மரமாய் வளர்ந்ததைப்போல் மற்றொரு பகுதி மூளையாய் வளர்ந்ததாகவே கருதப் பெறுவர் என்று விளக்குவார். அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் (997) என்பது அப்பெருமானின்பொய்யாமொழி. ஒருவரையொருவர் இகழ்ந்து அன்பில்லாமல் நடப்பது விளையாட்டிலும் தீமையானது. துன்பமானது. அதற்கு நேர்மாறாக, பண்புடையாளர்கள் பகை உள்ள இடத்திலும் பண்போடு நடப்பதைக் காணலாம். நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி, பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு (995) என்பது இதனை விளக்கும் வள்ளுவம். நண்பர்களாக இல்லாமல் தீங்கு செய்து வாழும் மற்றவர்களிடத்திலும் அவர்கள் பண்பு தவறாமல் நடப்பார்கள். அறிவுடையவர்கள் இந்தப் பண்பைத் துறந்து வாழ்வது பெரிய குறையாகும். நண்பாற்ற ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை (905) என்பது வான்மறை வள்ளுவம், மக்கள் ஒருவரோடு ஒருவர் பழகும்போது மனம் கலந்து மகிழ வேண்டும். இந்த மகிழ்ச்சி அடைய முடியாதவர்கள் உலகத்தில் வாழ்ந்து பயன் என்ன? இப்பரந்த பெரிய உலகம் அவர்கட்குப் பகலிலும் இருண்டு தோன்றும். உலக வாழ்க் கைக்கு அவர்கள் தகுதியற்றவர்களாகவே இருந்து தொல்லைப் படுவார்கள்.