பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. ஏர்ப்பின்னது உலகம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் . வீணிைல் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்' என்ற பாட்டடிகளில் தொழில்களில் உழலை முதலில் வைத்துப் போற்றினார் பாரதியார். உலகம் முழுவதும் உணவுக்காக "ஏர்ப்பினது' என்று கூறிப் போற்றுவார் வள்ளுவப் பெருந்தகை, வேறு எந்த வழிகளில் சுழன்றாலும் உலகம் முடிவில் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது. ஏரினால் விளையும் பொருளையே எதிர்பார்த்து நிற்கின்றது. அதனால் துன்பம் நிறைந்த தொழிலாக இருக்கும் உழவே தலையாய தொழில் என்பதை நாம் உணரலாம் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை (1031)" என்ற வள்ளுவத்தில் இது கூறப்பெற்றுள்ளது. உழவு செய்வது உடல் வருத்தும் தொழில் என்று கருதி அதைச் செய்ய முடியாமல் வேறு வழியில் வாழ்க்கை நடத்துகின்றவர்களையும் தாங்கிக் காப்பாற்றுகின்றவர்கள் உழவர்களே என்பது கண் - கூடு. ஆகையால் அவர்களே உலகத்தார்க்கு அச்சாணி 1. பா.க. தேசிய தேங்கள் கதத்திரப் பள்ளு 4 2.உழவு -1