பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 182 போன்றவர்கள் என்பதை உணர முடிகின்றது. இக்கருத்தை வள்ளுவர் பெருமான் இரத்தினச் சுருக்கமாக, உழுவார் உலகத்தார்க்கு ஆணி,அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து (1032): என்று தம் வாக்கில் வைத்து அழகாகக் கூறுவர். உழவு செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்ற வர்களே உரிமையோடு வாழ்கின்றவர்கள் ஆவர். மற்றவர்கள் பிறரைக் கைகட்டித் தொழுது வழிபட்டு வயிறு வளர்த்து உரிமை இல்லாமல் அவர்களின் பின் சென்று வருபவர்கள். உலக நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கி அந்த உலகியலை நன்கு உணர்ந்த வள்ளுவர்பெருமான், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர், மற்று எல்லாம் தொழுஉண்டு பின்செல் பவர் (1033): எனப் போற்றிப் பேசுவர். இவர்களை வேடிக்கையாக Բ.Հ- *. இக்காலத்தில் சிலர், டைகட்டி வாழ்வாரே வாழ்வர் மற்றுஎல்லாம் கைகட்டிப் பின்செல் பவர் என்று கிண்டல் அடிப்பதுமுண்டு , இன்றைய கட்சி அரசியலில் தேர்ந்தெடுக்கப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகி ஆள்பவர்களோடு தோளோடு தோள் போட்டு வாழ்கின்றவர்களும் மக்கள் குருதியை அட்டைபோல் உறிஞ்சி சுகவாசிகளாக வாழும் கட்சித் தொண்டர்களும் இதற்குச் சரியான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றவர்கள். 3.மேலது . 4.மேலது 3.