பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஏர்பின்னது உலகம் தம்கையால் வேர்வை செட்ட உழைத்துத் தொழில் செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழும் தன்மை உடையவர்கள் பிறரிடம் சென்று கையேந்தி இருக்க மாட்டார்கள் தம்மிடம் வந்து இரப்பவர்க்கு அவர்கள் கேட்கும் பொருளை வஞ்சகமின்றி வழங்கி உதவுவார்கள். இக்கருத்து. இரவான் இரப்பார்க்குஒன்று ஈவக் கரவனது கைசெய்துண் மாலை யவர் (1035)" என்ற வள்ளுவத்தில் பொதிந்து வைக்கப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழ்கின்றோம். உழவர் வாழ்க்கை மிக மிகச் சீர்கேடடைந்துள்ள இந்தக் காலத்திலும் பிறர்க்கு உதவும் பண்டை அவர்களிடம் காணலாம். அறுவடைக்காலத்தில் கூழையோ மற்றப் பொருளையே இரண்டு கையாலும் வாசி வழங்கு கின்றார்கள். கூழுக்குத் திண்டாடுங் காலத்திலும் தாம் குடிக் கும் கூழின் ஒரு பகுதியைக் கேட்டவர்களுக்குக் கொடுத்துப் பசிதீர்ப்பதை இன்றும் காணலாம். வெயிலில் வாடி நடந்து வரும் ஒருவருக்கு இளநீர் அளித்து அதனை அவர்கள் பருகும்போது பார்த்து மகிழும் உழவர்களை இன்றும் நாம் காணாமல் இல்லை. எதிர்காலத்தை பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் சேர்த்து வைக்கும் சிக்கனம் இல்லாமல் உதவி செய்யும் பண்பு இன்னும் இவர்களிடம் உள்ளது. அதனால் கைத்தொழில் செய்து வாழும் தொழிலாளர் உலகமே இரத்தலை கையேந்திப் பிச்சை எடுத்தலை ஒழிக்கவல்லது என்பது வள்ளுவர் பெருமானின் சீரிய கருத்தாகும். ,ே மேலது 5 வ. வா. சி - 14