பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 184 உழவர் பெருமக்கள் கைத்தொழில் செய்யாமல் ஒதுங்கினால் எவரும் வாழ முடியாது. ஒரு பொருளை மனத்தால் விரும்பும் தன்மையுைம் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் அப்பொதுவாழ்வு இல்லை. அவர் களும் துறவறத்தைக் கடைப்பிடிக்க முடியாது. இச்சீரிய கருத்து உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதுஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை (1036)" என்ற குறட்பாவில் அடக்கிக் காட்டுவது நமக்குப் பெருமகிழ்ச்சி யைத் தருகின்றது. உழவர்களின் பெருமையையும் சிறப்பையும் பாராட்டி மகிழ்ந்த வள்ளுவர் பெருமான் ஒரு பெரிய தொழில் நிபுணர்போல் உழவுத் தொழின் நுட்பத்தையும் பேசுகின்றார் இரண்டு குறட்பாக்களில், ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும். வரைக்கும் நிலத்தை உழுது காய விட வேண்டும். அவ்வாறு காய விட்டால் ஒரு பிடி எருவும் இல்லாமலே பயிர் நன்றாகச் செழித்து வளர்ந்து அமோகமாகப் பலன் தரும். இக்கருத்து, தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (1037): 'க ஃ க - கால் பலம் என்ற வள்ளுவத்தில் பொதிந்து வைக்கப்பெற்றுள்ளதைக் கண்டு மகிழ்கின்றோம். இன்றும் கோடை மழை பெய்த வுடன் நல்லநாள் பார்த்து நல்லேறு கட்டி உழவைத் தொடங்கும் மரபு. இருந்து வருவதைச் சிற்றுர்களில் கண்டு மகிழலாம். அதன் .ே மேலது 8 7.மேலது - 7 8. தொடக்கவிழாவன்று உழவர் பெருமக்கள் பஞ்சாங்கம் பார்ப்போர் கோயில் அர்ச்சகர் இவர்கட்கு மானியமாக விடப் பெற்றுள்ள நிலத்தை உழுது பணியைத் தொடங்குவார்கள்.