பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 நோயும் மருந்தும் தலைவனைக் காணாதபோது அவனைக் கண்டு களவு கொள்கின்ற சிறுநோக்கம் தலைவியிடம் உள்ளது. அதுதான் கண்களவு கொள்கின்ற சிறு நோக்கம் 1092 இது காமத்தில் செம்பாகம் அன்று பெரிது என்கின்றார் வள்ளுவர் பெருமான். காதலின் நுட்பத்தைத் தம்மதி நுட்பத்தால் கூறுவது இது. 'முகதரிசனம் முக்கால் மைதுனம்' என்பது பொது மக்கள் பேச்சில் அடிபடும் பழமொழி. இதனையொட்டி அமைந்திருப்பதையும் ஈண்டு சிந்திக்கலாம். தலைவி தலைவனைக் காணாதபோது ஏதே கருத்தை உட்கொண்டு நாணி இறைஞ்சுகின்றாள். அதுதான் அவர்களிடையே அன்பை வளர்க்கும் நீராக அமைந்து விடுகின்றது 1093. தலைவன் நோக்கும்போது தலைவி எதிர்நோக்காமல் நாணித் தலை குனிந்து நிலத்தை நோக்குகின்றாள். அவன் நோக்காதபோது அவனை நோக்கி அவள் தனக்குள் மகிழ்கின்றாள் 09கி. இங்ங்னம் காதல் வாழ்வில் கண் புரியும் திருவிளையாடல் களை எண்ணி எண்ணி மகிழலாம்.