32. இனிய இன்பம் எது? மங்கையர் மூலம் பெறும் இன்பம் இனியதா? தாமரைக் கண்ணான் உலகில் பெறும் இன்பம் இனியதா? தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (1103): என்று வள்ளுவர் பெருமான் ஒரு போடு போடுகின்றார். இஃது ஓர் வினாப்புதிர். இதற்கு விடைகாண்போம். தாமரைக் கண்ணான் உலகு வைகுந்தம். இதனைத் திருநாடு என்றும் 'பரமபதம்’ என்றும் நலம் அந்தம் இல்லதோர் நாடு திருவாய் 2.3.4) என்றும் நித்திய விபூதி என்றும் வழங்குவர் வைணவப் பெருமக்கள். ஆழ்வார்கள் பெருநிலம், பெருவிசும்பு, உம்பர் உலகு', 'விண்ணகம், நாரணன் உலகு இன்ப வீடு', 'அமரர் உலகம், வானேர் கடிநகர் என்றெல்லாம் பன்னி உரைப்பர். மங்கையர்மீது கொள்ளும் காமம் விஷயகாமம் மாதவன்மீது கொள்ளும் காமம், பகவத் விஷயகாமம்'; முன்னது சிற்றின்பம் நாம் இந்த உலகில் நேரில் அநுபவித்துப் பெறுவது. பின்னது பேரின்பம் கற்பனை அநுபவத்தால் காண்பது நித்திய விபூதியில் பெறுவதாகக் கூறப்பெறுவது. அதை அநுபவித்தார் எவரும் வந்து நமக்குக் கூறியதுமில்லை. பிறர் சொல்லக் கேட்டதுமில்லை. 1. புணர்ச்சி மகிழ்தல் . 8
பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/220
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை