பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 எது இனியது - சிற்றின்பா? பேரின்பமா? என்பதைக் கண்டதும் இல்லை. அவரைப்பற்றிப் பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. இந்த இருநிலைகளையும் அறிவியல் நோக்கில் விளக்க முயல்வேன். சிற்றின்பம்: மானிட உயிரணுவில் 23 இணை நிறக் கோல்கள் (Chromosomes) உள்ளன. உயிரணுக்கள் முதிர்ச்சி பெற்று முட்டையணுவாகவும் விந்தனுவாகவும் மாறுங்கால் அவை ஒவ்வொன்றிலும் 23 நிறக் கோல்கள் (உயிரணுவிலுள்ளவற்றில் பாதி தான் இருக்கும். குழந்தைகள் பிறக்கும்போதே வமிச விருத்தியின் பொருட்டு இவை முட்டையணுவிலும் விந்தணுவிலும் இயற்கையன்னை அடக்கி வைக்கின்றாள். பெண் பூப்பெய்தும் வரையிலும் ஆண் முன் குமரப்பருவம் அடையும் வரையிலும் இவை உறங்கிய நிலையில் வாளாகிடக்கும். இப்புருவங்கள் எய்திய பிறகு இவை செயற்படத் தொடங்குகின்றன. ஒற்றை நிறக் கோல்களாக இருப்பவை இணைநிறக் கோல்களாக மாறத் துடித்துகின்றன. இது இயற்கை நியதி இனப்பெருக்கத்தத்துவத்தில் இயற்கை யன்னை உண்டாக்கி வைத்த இரகசியம். இத்துடிப்புதான் காதல் உணர்வு. மனித நாகரிகம் இதனைத் திருமணத்தில் கொண்டு செலுத்துகின்றது. திருமணத்திறகுப்பிறகு நடைபெறும் புணர்ச்சி தான் காதல் உணர்வு ஒன்று சேர்க்கும் தத்துவம். இதுதான் சிற்றின்பம் என்று மக்கள் வழங்குவது. புணர்ச்சியால் மன மக்கள் பெறும் இன்பம் சிற்றின்பம் அன்று அது பெறற்கரிய பேரின்பம். இயற்கை அன்னையால் ஏற்படுத்தப் பெற்ற தெய்விக உணர்வு தெய்விக உறவும் கூட இனப் பெருக்கத்திற் காக ஏற்படுத்தப்பெற்ற இறைவன் கட்டளை என்று கூட இத னைக் கூறலாம். இஃது இவ்வுலகில் பிறந்த ஆண் பெண் இ வரும் இணைவதால் ஏற்படுவது இதுவே கீழ்க்காட்டிய குறளிலுள்ள தாம் வீழ்வார் மென்தோள் துயில் என்ற தொடர் குறிப்பிடுவது