பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் iS6 நீங்கில் தெறுஉம் குறுகுங்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104) என்பது பொய்யாமொழி. இப்பாடலைப் படித்து அநுபவித்து மகிழ வேண்டும். இன்ப நிலையை நினைக்கும் போதே களிப்பு உண்டாகிறது. இன்பம் தரும் தலைவன் தலைவியைக் காணுபோதோ. தலைவி தலைவனைக் காணும் போதோ மகிழ்ச்சி உண்டாகின்றது. இந்த இரண்டு வகை உணர்வுகளும் போதை நல்கும் கள் என்ற பொருளுக்கு இல்லை என்று காமத்தையும் கள்ளையும் ஒப்பிட்டுக் காட்டுவார். உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு (1281) என்ற அவர் திருவாக்கில் இவற்றைக் கண்டு மகிழலாம். இன்பச் சுவையை ஒரு சிறந்த கருத்துரை.கொண்டு, அவரவர் நுகர்வு பூர்வமாகவே படிமுறை உயர்வில் ஒரு விழிப்புணர்ச்சியுடன் விளக்கியிருக்கும் சுவைத்திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. தம்மில்இருந்து தமதுபாத்து உண்டற்றால அம்மா அரிவை முயக்கு (1107) என்பதில் இதனைக் காணலாம். தம்இல் - தாம் உழைத்துச் சம்பாதித்துக் கட்டியலிடு வாடகை வீடு அல்ல. தமது பாத்து தாம் உழைத்துச் சம்பாதித்த பொருள் முன்னோர் சம்பாதித்த சொத்தில் வரும் பொருள் அல்ல. அரிவை முய்க்கு பெண்ணைத் தழுவி நுகரும் இன்பம். தமது வீட்டிலிருந்து கொண்டு தாம் சம்பாதித்த பொருளால் உணவுப் பொருளை உன்னும் போது பெற்ற இன்பம் போன்றது. இவளைத் தழுவி