பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 193 செய்கின்றிலை" என்று நெஞ்சை நோக்கிப் பேசுகின்றாள் தலைவி. அவர்நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன்நெஞ்சே: தீமைக்கு ஆக தது (1291) என்பது வள்ளுவம், இன்பவாழ்வில் - புதிதாக மணந்து இன்பம் துகளும் வாழ்வில் - மூன்று நிலைகள் உள்ளன. இன்ப வாழ்வில் நுகர்ந்த நிலையில் நாளடைவில் இன்பம் குன்றுதல், அது இனிதாக அமைவதற்காக ஊடுதல், இந்த ஊடல் முதிர்ந்து உள்ள இன்பத்தையும் கெடுக்காதவாறு அளவறிந்து ஊடலை நீக்குதல் என்பவை அவை, ஐடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியன் பெற்ற பயன் (1309) என்பது வள்ளுவரின் பொய்யாமொழி. ஊடலைப்பற்றி பல அற்புதமான அமுதமொழிகள் உள்ளன. சிலவற்றை மட்டிலும் ஈண்டுக் காட்டுவேன். காதலன் ஒரு மாலையைச் சூட்டிச் செல்லு கின்றான். அந்த மாலை வேற்று நிலத்து மரப்பூக்களாலானது. அதைக் காதலி கண்டதும் ஊடுகின்றாள். 'உன் காதலியாரோ ஒருத்திக்கு இநத அழகைக் காட்ட வேண்டும் என்று தான் சூட்டியுள்ளாய் என்று ஊடுகின்றாள். கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று (1318) என்பது வள்ளுவம். காதலன் அன்பின்மிகுதியால் காதலர் யரையும் விட