பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 200 இவ்வாறு தன் வாயால் வாழ்த்துப் பெற வேண்டும் என்றும் ஊடலை முடிக்க வேண்டும் என்றும் வேண்டுமென்றே காதலன் செயற்கையாகத் தும்மினான் என்று எண்ணுகின்றாள் காதலி. ஊடல் முடிவதுபோய் அது மிகுதியாயிற்று. அடுத்த நொடியில் அவள் மனத்தில் வேறோர் எண்ணம் தோன்றுகின்றது. 'யாராவது நினைத்தால்தான் ஒருவருக்குத்தும்மல் வரும் என்று சொல்வர்கள். இப்போது இவரை யார் நினைத்திருப்பார்கள்? தினைக்கும் உரிமையுடையவள் நான் ஒருத்திதான் என்று எண்ணி இருந்தேன். இன்னும் யாரோ ஒருத்தி இவருக்குக் காதலியாக இருக்க வேண்டும். அவள் நினைத்ததால்தான் இவளுக்குத் தும்மல் வந்தது என்று எண்ணிக் காதலனை நோக்கி யார் நினைக்கத் தும்மல் வந்தது? என்று கேட்டு ஊடுகின்றாள். இதை உணர்ந்த காதலன் அடுத்த தும்மாலை வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொள்ள முயல்கின்றான். அதை அறிந்த காதலி தெரிந்து விட்டது. தெரிந்து விட்டது. உன் காதலி நினைக்கின்றாள் என்பது எனக்குப் புலப்படாதபடி மறைக்கின் நாய். அதனால்தான் தும்மலை அடக்குகின்றாய் என்று சொல்லி அழுகின்றாள். ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து (1312) வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று (1317) தும்முச் செறுப்ப அழுதாள் நூமர்உள்ளல் எம்மை மறந்திரே என்று (1318) என்பவை அற்புதமான வள்ளுவங்கள்.