பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மலரினும் மெல்லிது காமம் காதல் உணர்வு மலரினும் மெல்லிது. இறைவனால் இனப்பெருக்கத்திற்காக வழங்கப்பெற்ற ஓர் அற்புத ஆற்றல் ஐயறிவுப் பிராணிகளிடம் ஆண்டில் சிலகாலப் பகுதியில் உடலில் ஊறும் ஒருவகைச் சத்துச் சாறுகளால் செயற்படுகிறது. ஊறுதல் அடங்கியவுடன் அவற்றின் உணர்ச்சி செயற்படு வதில்லை. மனிதனிடம் அவ்வுணர்வு மூளையினால் நரம்பு மண்டலம் செயற்படுகின்றது. ஆதலால் அவ்வுணர்வு இரவும் பகலும் கனவிலும் நனவிலும் தலைகாட்டிக் கொண்டே உள்ளது. இனப் பெருக்கத்திற்காக வழங்கப்பெற்ற அத் தெய்விக உணர்வை தகாத வழிகளில் பயன்படுத்தத் தொடங்கு கின்றான் மனிதன் கதைகளில், தெய்வ வரலாறுகளிலும் கூட இவ்வுணர்வு தகாத வழிகளில் செயற்படுவது காட்டப் பெற்றுள்ளது. திருவிளையாடற்புராணத்திலும் தாயைப் புணர்ந்தகதை மாபாதகம் தீர்த்த படலம் குருபத்தினியைப் புணர்ந்த கதை அங்கம் வெட்டிய படலம் ஆகியவற்றை விட்டு வைக்க வில்லை. ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு வாய்க்கப்பெற்ற அதைத் தகாத வழியில் மனசாட்சி உள்ளிருக்கும் இறைவன் தடுத்தாலும் அதனையும் மீறிச் செயற்படுவது மிகவும் வருந்ததக்கதாக உள்ளது. விடுதலைப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று தம் கட்சிகட்கும் பெயரிட்டுக் கொண்டு மூர்க்கத்தனமாகச் செயற்பட்டுவது மனித நலத்தையே கனவிலும் நனவிலும் கொண்டுள்ள உண்மை w.a:Rజs:ఢఃāk జ#జoశః 1.4珞酶爵 § - ?