பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. முடிப்புரை வாழ்க்கை இலக்கணமாகத் திகழும் தொல் காப்பியத்தைப்போல, வாழ்க்கை மறையாகத் திகழ்வ: வள்ளுவர் வான்மறையாம் திருக்குறள், இவை இரண்டிற்கு ஏனைய இலக்கண இலக்கியங்கட்குமெல்லாம் அச்சாணி யா நின்று உதவுவது மரபிலக்கணம் மரபுகளைப் பொருட்படுத்தாவிட்டால் நூல்கள் y岱。 ஒழுங்கு முறையற்றுத் தள்ளாடிப் பயனற்றுப் போகும். மரபு - ੋ స్టో? { } முறைகளைத் தழுவி நடக்காதவர்கட்கு நூல்களால் பெரும் |} பயனும் இல்லை. நடத்தையும் நெறி தவறும் வாழ்க்கையு நிலை குலையும். மரபிலக்கணத்தைத் தழுவி நடப்பதே எல்லாவற்றிற்கும் மாமருந்து. நூல் வழக்கும் ஏனை உலக வழக்கும் உடம்பைப் போல்வன. மரபு ஒன்றுதான் அதற்கு உயிர் உயிரற்ற உடம்பு எதற்கு உதவும்? அத்தகையனவே மரபு தழுவாத நூல்களும் உரைகளும் நடத்தைகளும், மரபுநிலை திரிதல் மாபெரும் குறையாய்க் கருதப் பெறும் காரணம். மொழியே அதனால் நிலை குலைந்து விடும். உடம்பும் அதன் உறுப்பும் சிறிது ஊனமாயிருந்தாலும் உயிரொழுக்கம் திரியாமல் வாழ வேண்டியது நல்வாழ்க்கையின் இயல்பு நற்பண்பு. மரபை மாற்றிப் புதிதாக ஒரு வழக்கத்தை உண்டு ఓ த பண்ணுவதை நேர்மையாளராகிய சான்றோரும் எளிதில் செய் ஒருப்படார். தொல்காப்பியர் தம் நூலைத் தொடங்கும் போதே &