பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 212 நூன் மரபு, மொழிமரபு என்று மரபுப் பெயர்களா லேயே தொடங்கினமை ஈண்டு நினைவு கூர்தற்குரியது. மரபுகளைக் கடைப்பிடித்தற்கு உயர்ந்த நூல் வழக்குகள் முன்னும் பின்னுமாய் இருந்து உதவுகின்றன. வள்ளுவர் பெருமானும் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்க் காப்பியரும் எல்லைக் கற்களாக இருந்து மரபுகளைக் காத்து வந்த பெரியோர்களாவர். திருக்குறள் மறைநூலாக விளங்கு வதால் பின் வந்த ஆசிரியர்கள் பலரும் மரபு கொள்வதற்கு அம்மாபெரும் வான்மறை வள்ளுவர் நூலையே கலங்கரை விளக்கமாகக் கொண்டனர். பன்னெடுங்காலமாக மரபு கொண்டு நிலை நின்று வருகின்ற வள்ளுவரின் வான்மறைக் கருத்துகளை அவற்றின் உறுதி தேர்ந்து சிதைக்காமல் தழுவி வாழ்வது நல்லோராகிய பெருமக்களின் கடமை. மேலும் திருக்குறள் காலத்தால் மாறுபடாத, தேயத்தால் பிறகுழலால் கிளர்ச்சி புரட்சிகளால் நிலை திரியாத மாபெரும் உண்மைகளையே தொகுத் துரைக்கும் நூலாகும். உண்மைகளை மறைக்கும் சில கால வேறுபாடுகள் உண்டு. அந்நிலையில் அத்தகைய காலமாசுகளையே சான் றோர் போக்குவர் போக்குவதற்குரியவை கால நிலைகளாகிய மாசுகளேயன்றி உண்மைகள் அல்ல. திருக்குறள் உண்மைகள் என்றுமே மாசுபடுபவன அல்ல. தமிழகம் நெடுங்காலப் பழைமையுடையது. ஆதலால் காலந்தோறும் அதன் நாகரிக வாழ்க்கையிலும் மொழியிலும் மாசுகள் படிதல் இயல்பு அம்மாசுகளை நீக்கி மாசிலாமணி களாக மாந்தரை விளங்க வைக்கும் பொருட்டே திருக்குறள்