பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 முடிப்புரை வழியில் பெரியோர் புரட்சிகளைச் செய்தனர். அவர்கள் யாரும் திருக்குறள் உண்மைகளைச் சிதைக்க வில்லை. உண்மைகள் எழுத்தாலும் சொல்லாலும் மட்டும் துணியப்படுவன அல்ல. மரபால் துணியப்படுதலே உறுதி மிக்கது. சொல்லாலும் பொருளாலும் தருக்கம் முதலிய முறைமைகளாலும் கலைகளாலும் மெய்ப்பொருள் துணி. முடியாத நிலையில் மரபு ஒன்றுதான் அதைத் துணிவிக்கும் சிறந்தவாயிலாக உள்ளது. சிக்கலுள்ள இடங்களிலெல்லாம் மரபுதான் கைக்கொடுத்து உதவும். மரபு நிலை திரியா மாட்சிமை கொண்டதாய் உள்ள உண்மைகளைக் கொண்ட வள்ளுவர் பெருமான் வழங்கிய நூலை, பல்வேறு வகைப்பட்ட நூல்களை யெல்லாம் கற்கும் காலத்தில், இடை இடை புரட்டிப் பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கைக்குப் பாங்காகவுள்ள சில உண்மைகள் உள்ளங் கவரும். அத்தகைய உண்மைகளைச் சிந்தித்து அவ்வப் பொழுது எழுதி வைத்திருந்த விளக்கங்களின் தொகுப்.ே இந்நூல். யாவும் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வல்லனவாக அமைந்தன. பல்லாற்றானும் சிறந்த இத்திருக்குறள் செல்வம், பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ? (உரைச் சிறப்புப் பாயிரம்) என்பதும், மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம் சிக்கலறக் காட்டி நலம் செய்துலாம் கவிமணி செய்ய மொழிக்கும் திருவள்ளுவர் மொழித்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே