பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 214 உள்ளுதொ றுள்ளுதொறுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி - (மாங்குடி மருதனார்) உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு - (செயலுர்க் கொடுஞ் செங்கண்ணனார்) தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள்வெண் பாவிற் சிறந்திடுமுப்பால் (உறையூர் முதுகூற்றனார்) எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் -(மதுரைத் தமிழ்நாகனார்) சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாக்கினிய வந்தஇருவினைக்கு மாமருந்து (கவுணியனார்) வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் (ஆலங்குடிவங்கனார்) என்ற புகழ் மாலைகள் நூலுக்குப்பொருந்து வனவாகின்றன. எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுச் செப்பிய வள்ளுவர் - (பாலை.பாடிய பெருந் தேவனார்) வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவஎல் லாம்.அளந்தார் ஓர்ந்து (பரணர்) அறம்பொருள் இன்பம்வீ டென்னும் அந்நான்கின் திறம் தெரிந்துசெப்பிய தேவு -(மாமூலனார்)