பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 2 மனிதனின் வாழ்நாள் குறுகியது. இதில் பிணிகளும் முயற்சிகளும் பல ஆதலால் கற்கத் தக்கவை மட்டும் கற்றால் போதுமென்பதும், கற்றவகையில் உடனுக்குடன் செயலுறு தல் மிகுதியாயிருக்க வேண்டும் என்பதும், செயலுறுதலின் முகமாகத் தெளிவு மேம்பட்டுக் கொண்டு வருதலே மேன்மேலும் கற்றலாகும் என்பதும் அப்பெருமானின் கருத்தும் குறிக்கோளும் ஆதலால் அவற்றிற் கேற்ப நூலின் சுருக்க அமைப்பும் அமைந்துள்ளது. t நூல் மிகச்சுருக்கமான குறள் யாப்பில் அமைந்து அதன் அதிகாரம் ஒவ்வொன்றும் சுருங்கிய அளவு எனப்படும் பதிகமாகவே அமைந்துள்ளது. இவற்றுடன் இயலும் பாலும் நூலுக்கெல்லாம் சுருங்கிய அளவிலேயே அமைந் துள்ளன. 12. அதிகார அமைப்பும் அற்புதம். எல்லா அதிகாரங்களும் அளவு ஒத்துப் பத்துப் பத்துக் குறட் பாக்களையே கொண்டிருப்பது. 3 அதிகாரக் கருத்துகள் எவ்வளவாக இருந்தாலும் அவை பத்துக் குறள்களின் மூலமே சுரந்து வெளிப்படும் முறையில் பாக்கள் அமைந்துள்ளன. 4. கருத்துகள் பலவாயினும் அவற்றைப் பத்து முறைகளால் ஒவ்வோரதிகாரத்திலும் எடுத்துக் கூறுதல் 15 பாக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அமையும் எளிமையும் பத்தின் முறையே என்பதும் சிறப்பு 18 நெட்டுருச் செய்து நினைவுகூர்வதற்கு அதிகாரந்தோறும் ஒரே அளவாய் இருத்தலும் சிறப்பாகும்.