பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. வான் சிறப்பு நீரின்றி அமையாது உலகுனனின் யார்யார்க்கும் வான்இன்றி அமையாது ஒழுக்கு (20) என்பது வள்ளுவம். இதனால் மழையின் தலைமைப்பாடும் விளங்கும். ஒரு பொருளுக்குத் தலைமை கூற வேண்டுமானால் அந்தப் பொருள் இன்றி மற்றப் பொருள்களால் காரியம் ஆகாததாய் இருக்க வேண்டும். அதனைத்தான் இன்றி அமையாது என்னும் தொடர் புலப்படுத்துகின்றது. அப்பொருள் இன்றி வேறு எப்பொருளாலும் காரியம் அமையாது என்பது கருத்து. வான்சிறப்பு என்பதில் சிறப்பு என்னும் சொல் இந்தத் தலைமையை, இந்த இன்றியமையாமையை உணர்த்துவதே யாம். இவ்வாறு வான் சிறப்பு என்று அதிகாரத் தலைப்பு அமைந்ததன் கருத்தை வான் இன்று அமையாது என அதன் இன்றியமையாமையைத் தேற்றி, அதன் தலைமைப்பாட்டை இனிது விளக்கி நிற்கின்றது. இன்றொரு கருத்தையும் ஈண்டுச் சிந்தித்தல் தகும் உலக இயற்கையில் கெடுப்பவர் ஒருவராகவும் தடுப்பவர் ஒருவராகவும் இருக்கக் காண்கின்றோம். அங்ங்னமே, கெடுத்து நோய் உண்டாக்கும் பொருள் ஒன்றாகவும் தடுத்து நோய் தீர்க்கும் மருந்து வேறு ஒன்றாகவும் உள்ளன. கெடுக்கும் தீவினை வேறு ஆகவும் எடுக்கும் நல்வினை வேறு ஆகவும் இருப்பதையும் காண்கின்றோம். ஆனால் அருள் என்ற ஒன்றே கெடுக்கவும் எடுக்கவும் தலைமையான அதிகாரம் உடையதாய், கீழ்க் குறிப்பிட்ட நல்வினை தீவினை முதலியவற்றிற்கு அப்பாற் பட்டதாய் ஆற்றல்மிக்குத் திகழ்கின்றது உரிமை என்பதும்