பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அறன் வலி உறுத்தல் திருக்குறள் ஓர் அறநூல் அருமறைக கருததுகள த்தின் வீறு நூலெங்கும் பிரதிபலிக்கும் عين الأ "-" للشيني نجفينين سا தைத் தருவதற்காக பாயிரமான இப்பகுதியில் அறம் நன்கு வலியுறுத்தப் பெறுகின்றது. இதனால் அதிகாரத்தின் தலைப்பும் அறன் வலியுறுத்தல் என்ற திருநாமமும் பெறுகின்றது. அறம், பொருள். இன்பம் இவற்றில் அறம் வீறு மிக்கது. இப்பண்பே அறத்துப்பாலை நூலின் தொடக்கத்தில் முன்னிறுத்தும் கட்டாயத்தையும் பெற்றது. அறமே வாழ்க்கைக்கு வேண்டிய சிறப்பையும் தரும்: செல்வத்தையும் நல்கும். ஆகையால் அறத்தை விட உயிர்க்கு ஆக்கம் தருவது இதைத் தவிர வேறொன்று இல்லை. சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினு உங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (31) தில் செல்வம் என்பது பொருள் குறித்து வருதலால் சிறப்பு என்பது அருளைக் குறித்தது என்று கொள்ள வேண்டும். தலைமைப்பாடு என்று பொருள் கொண்டால் அருள் தலைமை என்பது கருத்தாகும். தம்மைப் பார்த்து மற்றவர் விடுக்கும் வினாவிற்கு வள்ளுவர் பெருமான் தாமும் ஒரு வினாவை விடுக்கின்றார். 'அறத்தினுங்கு ஆக்கம் : { யிர்க்கு? வினா வினாலேயே விடை சொல்லும் து. அறத்தை விட ஆக்கம் உலகில் வேறு எது உளது?