பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 அறன் வலி உறுத்தல் செய்கை என்பது மன அழுக்கு இல்லாமல் நடந்து கொள்வது என்றுஒரு முக்கியத்துவமும் கூறினார். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்பதில் அறன் என்று வரும் சொல் செய்கை என்னும் பொருளுக்கு உரியது. முன் குறளில் 33 கூறிய அறவினை மன அழுக்கு அற்றிருக்க வேண்டும் என்பது கருத்து. பொறாமை, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்த நான்கையும் கடிந்து நடப்பது அறமாகும். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது. அறம் (35) என்பது பொய்யா மொழி. இங்கும் அறம்' என்ற சொல் அறச்செய்கையை உணர்த்தும். அதனால் அதன் வினைச் சொல் நடைபெறுவது என்னும் கருத்தில் இயன்றது என வந்தது. 'அறம் என்பதற்குச் செயல் முகமே தேவை என்றாலும் அதற்கு மனமும் தூய்மையாய் இருக்க வேண்டும் என்னும் கருத்தை வற்புறுத்தவே மனத்துக் கண் 34 என மனமும் 'இன்னாச் சொல் (55) எனச் சொல்லும் இரண்டு குறள்களில் நினைவூட்டப் பெற்றன. மனமும் சொல்லும் செயலுக்குத் துணையாவன. செயல் இல்லை என்றால் நினைவும் சொல்லும் உருவாகப் பயன்படுவதில்லை. நினைக்க மட்டும் வல்லவர் களாகவும், சொல்ல மட்டும் திறன் படைத்தவர்களாகவும் இருந்தால் அந்நினைவும் சொல்லும் பிறரைச் செயலுக்கு ஊக்காது. செயலில் சென்று முடியாத நினைவாலும், சொல்லாலும் யாருக்கு என்ன பயன்? அதனாலேயே அறத்தை 'அறவினை என்று வள்ளுவர் பெருமான் செயலுக்கேற்பப் பெயர் கொடுத்தார். அன்றியும் செல்லும்வாயெல்லாம்