பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அறன் வலி உறுத்தல் இந்த இயக்கம்; அதற்கு இறைவன் இயக்கத்தால் கிடைக்கின்றது. அறத்தை இதனால் அறத்தாறு 37) என்னும் நெறிப் பெயரால் வள்ளுவர் பெருமான் ஓர் எடுத்துக் காட்டுடன் விளக்குவர். வாழ்க்கையில் அறியாமை காரணமாகக் கொள்ளப் படும் உயர்வு தாழ்வுகளை வைத்து அறத்தை அளந்தறியக் கூடாது. அகத்தே எண்ணும் எண்ணங்களின் துய்மையாலும் நெஞ்சின் இன்ப துன்ப உணர்வுகளாலும் அறத்தை அறியக் கூடுமே அல்லாமல், புறத்தே உள்ள உயர்வு தாழ்வுகளால் அறிய முடியாது. ஆகையால் பல்லக்கைச் சுமப்பவன், ஊர்பவன் இவர்களிடையில் வைத்து, அறஞ்செய்யாத காரணத்தால் சுமக்கின்றான் என்றும், இவன் அறஞ்செய்த காரணத்தால் ஊர்கின்றான் என்றும் அறத்தின் பயனை அளந்து கூறவேண்டா: சுமப்பவன் இன்புறுகின்றான் எனவும், ஊர்கின்றவன் துன்புறுகின்றான் என்றும் கூறமுடியாது. இன்ப துன்ப உணர்வுகளை நெஞ்ச நிலையால் அறிய முடியுமே அல்லாமல் இத்தகைய வேறுபாடுகளால் அறிய முடியாது. அரியணை மேலிருந்து அழுது கலங்குவாரும் உண்டு. எளிய வாழ்வில் நடைபாதையில் வாழ்வார் அமைதியாக இன்புறு வதும் உண்டு. வாழ்க்கைக் கடமைகளில் எது தன்னலங் குறைந்ததாய்ப் பிறர்க்கு நன்மை மிகுந்ததாய் உள்ளதோ 3. சிவப்பிரகாசம் - 34.