பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 34 வே ..ர்ந்தது". இன்பம் நல்குவது. எது தன்னலம் மிகுந்ததாய்ப் பிறர்க்கு நன்மை குறைந்ததாய் உள்ளதோ அதுவே தாழ்ந்தது. துன்பம் விளைவது. ஆகையால் புறத் தோற்றத்தைக் கண்டு அறியாமையால் காண்பிக்கும் உயர்வு தாழ்வுகளைக் கொண்டு அறத்தின் பயனை அறிந்தறியக் அ.து. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37) என்பது உலகுக் கெல்லாம் ஒளி காட்டும் ஒளி விளக்கு. உலகத்தில் மக்கள் பலப்பல வகைகளில் இன்பம் காணுதல் உண்டு. செல்வத்தால் அறிவால் இன்பங்கள் காண்பது மட்டுமின்றி. காமத்தால் கள்ளால் சூதால், இன்னும் இவை போன்று பல்வேறு தீமைகளாலும் இனம் காண்பதை அறிவோம், பிறரைத் தண்டித்தலில் கூட இன்பப் படுவதும் உண்டென்று வள்ளுவர் பெருமானே ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் (156) என்று கூறுவார் இங்ங்னமெல்லாம் வாழ்க்கையில் இன்பம் காண்பதற்கு மக்கள் பலவாறாக 4. பல்லக்கைத்தாங்கிச் செல்வோரும் மனிதரே.அதில் ஏறிச் செல்வோரும் மனிதரே. இருவரும் ஒருவழியில் பிறந்தவரேயாவர். இருவரும் தொழில் முறையில் ஈடுபட்டவரே ஆவர். அறநெறி தொழிலிடைப் பொதுவாய் இலங்குவது.அறநெறி பல்லக்குதாங்கலில் சுருங்கியும் அதில் செல்கையில் பெருகியும் நிற்பதோ இல்லை. பல்லக்கைச் சுமந்து செல்வோரும் அறநெறி நின்றால் அறவோர் ஆகலாம். ஆகையால் அறவோர் ஆகும் வாய்ப்பு இருவருக்கும் உண்டு. ஒருவர்க்கு மட்டும் அவ்வாய்ப்பு இல்லை. அறத்தாறு ஒரு சாரார் பக்கம் சாயும் தன்மையுடையதன்று (திரு.வி.க. அவர்களின் திருக்குறள் விரிவுரை, காண்க) இப்புதுக் கோணச் சிந்தனை உளங்கொள்ளத் தக்கது.