பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அறன் வலி உறுத்தல் முயல்கின்றனர். இவை அத்தனையும் இவைபோல்வன பிறவும் தருவன தக்க இன்பம் அல்ல, சிறுமை இன்பங்களே. இவை நிலையுள்ளனவும் அல்ல. அறத்தான் வருவதே இன்பம் என்பது வள்ளுவரின் அசைக்க முடியாத முடிபு. அறம் ஒன்றே மனச் சான்றை மகிழ்விக்கும். அந்த மனச்சான்றின் மகிழ்ச்சியே உண்மையான இன்பமாகும். மனச்சான்று ஒருவனைச்சுடும்போதும் (293) குற்றங் காட்டும் போதும் 272 ஒருவன் கண்ணுக்கும் செவிக்கும் மூச்சிற்கும் நாக்கிற்கும் உடம்பிற்கும் இன்பமாக என்னென்ன தேடித் திரியினும் அவை இன்பம் ஆகா. அவற்றால் மனம் அமைதி யுறாமல் மேன்மேலும் அலைந்து வருந்திக் கொண்டே இருக்கும். ஆகையால் அறத்தால் வருவதே உண்மை இன்பமாகும். மற்றவை எல்லாம் போலி இன்ப மாகும். புகழும் இல்லாதவையாகும். அறத்தான் வருவதே இன்பம்;மற் றெல்லாம் புறத்த புகழும் இல (39) என்பது பொய்யா மொழி. அறத்தாற்றால் வரும் இன்பம் இந்த அளவோடு மட்டு மின்றி வாழ்நாள் வழிஅடைக்கும் தடைக்கல்லாகவும் நின்று எல்லாத் துன்பங்களையும் உள்ளடக்கிய பிறவித் துன்பத்தையே மாற்ற வல்லதாகிய பேரின்பம் பயப்பதாக உள்ளது என்பதும் வள்ளுவர் பெருமானின் கருத்து. அதனால் தான், செயற்பாலது ஒரும் அறனே, ஒருவற்கு உயற்பாலது ஒரும் பழி (40) என்ற இறுதிக்குறட்பாவில் செய்யத்தக்கது அறனே. தவிரத்