பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 தாயும் நூலாசிரியரும் கட்டுரைகளாகவோ அச்சில் வெளியாகும்போது கட்டாயம் அவர்கட்கு ஆனந்தம் ஏற்படத்தான் செய்யும். இந்தப் படைப்புகளை வாசகர்கள் படித்து மகிழ்ச்சி அடைதலைக் கேள்வியுறும் போதும் இவை அறிஞர்களின் மதிப்புரைகளாக செய்தித் தாள்களிலும் பருவ இதழ்களிலும் வெளிவருவதைப் பார்க்கும் போதும் படைப்பாளர்க்குப் பெருமகிழ்ச்சி ஏறப்படும். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் அவள் பெரிது உவப்பதைப் போல் படைப்பாளர்களும் பெரு மகிழ்ச்சி அடைவார்கள், பெரிதும் உவப்பார்கள் என்பதற்கு ஐயம் இல்லை. அன்றாட அநுபவத் தில் இவற்றைக் கண்ணுறலாம். 1950-60 ஆண்டுகளில் நான் காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியர்க் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் என் நண்பர் டாக்டர் திருவேங்கடாச்சாரியார் எழுதிய இராமநாதபுரம் அரசர்களைப்பற்றிய நூல் ஒன்றினை இராமநாதபுரம் அரசர் பள்ளியில் வெளியிட்டார். அந்த வெளி யீட்டுரையில் எழுத்தாளர்கட்கும் ஈன்ற பொழுதில் பெரிது வக்கும் அநுபவத்தைப்பற்றி முதன் முதலாகக் குறிப்பிட் டேன். இதனைக் கேட்டு மகிழ்ந்த பாரிகாதை எழுதிய பேராசிரியர் இரா. இராகவய்யங்கார் திருக்குமாரர் இராமாநுச அய்யங்கார் அப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டி ருந்தவர் உடனே எழுந்து ஓடிவந்து என்னைக் கட்டி அணைந்த வண்ணம் "என் தந்தையார் கூட இந்த நுட்பமான கருத்தை ஒரு நாளும் எடுத்துக் கூறவில்லை; தாங்கள் இதனைக் காட்டிய போது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழச்சி ஏற்படுகின்றது" என்று தம் பாராட்டுதலைத் தெரிவித்து மகிழ்ந்தார். அதன் பிறகு இக்கருத்தை இரண்டு மூன்று