பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வாழையும் வள்ளுவமும் இயற்கை மனிதனுக்குப் புகட்டும் பாடம் சொல்லும் தரம் அன்று அனைத்தும் அதில் அடங்கி இருக்கும் அற்புதம் அளவிடப்படாதது. மனிதன் கானும் கனவுகள், கற்பனைகள், அவன் வடித்த நூல்களின் உள்ளுறை ஆகிய அனைத்தும் உலக இயற்கையின் வடிப்புகளேயாகும். ஊன்றி நோக்கினால் அவை எல்லாப் பொருள்களின் உள்ளுறையாகவும் காட்சியளிக்கும் படம் புகட்டி அறிவு தெருட்டும் வழிவகை கனகவும் திகழும் என்பதும் தெளிவாகும். வழை ஏனை எல்லா உயிர்களையும் விட ஆறறிவும் அது உணர்வும் உடைய மக்கள் இனத்திற்குப் பேருதவியாக இருத்தலால் உயர்ந்த இனத்துடன் சேரும் அருகதை உடையதாகத் திகழ்கின்றது. இத்தகைய பெருந் தகுதியை இயற்கையிலேயே பெற்றுள்ள வாழை மரம் மக்கள் இனத்திற்கு வேண்டிய அறம், பொருள். இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருளுக்கும் உள்ளுறையாகத் திகழ்வதையும் குறிப்பாற் புலப்படுத்துகின்றது. இவற்றினை 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு" என்ற தொல்காப்பியம் கூறும் நிரல்படி சிந்திப்போம். இன்பத்திறம்: வாழையின் தோற்றமே இன்பத்தின் உள்ளுறையாகும். அது வழுவழுப்பாய், ஒழுங்காய், நீண்டு பசிய இலைகளை உடையதாய் மிக அழகாய் அழகிய நங்கையைப்போல் காட்சி அளிக்கின்றது. அதன் அழகு கண்டார் கண்ணைக் கவரும் திறத்ததாய்த் திகழ்கின்றது. .g * * * 3. 1. தொல் பொருள் அகத்தினை.