பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி என்று வந்து விட்டால், உடனே பண ஆசை தான் புடைத் தெழுந்து கொண்டு நிற்கிறது. பண ஆசை மன ஆசைக்குள் விழுந்து விடுகிறபோது, மனித மாண்பு பற்றியே மறந்து போய்விடுகின்றார்கள்.

மனிதர்களை மனிதர்களாய் வாழச் செய்ய, இந்த நாளில் உதவுவது விளையாட்டுக்களாகத் தான் இருக்கின்றன என்று நான் பேசிக் கொண்டே வந்ததிை, வள்ளுவர் மிகவும் கவனத்தோடு கேட்டுக் கொண்டே வந்தார்.

இப்பொழுது நாம் பார்த்தோமே கிரிக்கெட். இதுமட்டும் தான் விளையாட்டா? இன்னும் வேறு உண்டா என்றார். கிரிக்கெட் அவர் மனதில் அப்படி இடம் பெற்றுக் கொண்டது போலும்!

பலாப் பழத்தில் ஈ மொய்ப்பது போல், பார் வையாளர்கள் கூட்டம் ரசிகர்களாகி, விளை யாட்டு வீரர்கள் மீது மொய்த்துக் கிடக்கின்ற மோகலாகிரி தன்மையால், விரும்பத்தகாத கூட்டம், வேக் வேகமான உரையாடல்கள். விவேகமில்லாத நடைமுறைகள் போன்றவை நடைபெறுவதைப் பார்த்த, வள்ளுவருக்கு, இப் படியும் ஒரு விளையாட்டு தேவைதானா என்னும் சிந்தனை எழ, அதில்ஆழ்ந்து போனார். !

- - oz

இருக்கின்ற விளையாட்டுக்களில், இது ஒரு பணக்கார விளையாட்டு. வாழ்க்கையில் வசதி