பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவையே காலக்கிரமத்தில், வாழ்க்கையோடு வாழ்க்கையாக ஒன்று கலந்து போயின. இந்த ஒன்றிய நிலையால் தான், விளையாட்டுக்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து போய், மக்களுக்குப் பயனளிக்கும் மேன்மை நிலைக்கு எழுந்தன.

உதாரணமாக, மக்கள் எல்லாம் தோற்றத்தில் ஒன்று போலத் தென்பட்டாலும், எண்ணத்தில், நோக்கத்தில், வெவ்வேறுபட்ட விருப்பினர் களாகவே, அன்று முதல் இன்று வரை வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

மக்களில் ஒரு சாராருக்கு கால்களை அதிக மாகப் பயன் படுத்தி விளையாட வேண்டும் என்ற வேட்கை எழுந்த போது, கால்பந்தாட்டம் என்பதாக உருவாகிக் கொண்டது.

கையால் ஆடவேண்டும், என்கிற போது கைப் பந்தாட்டம், விரலால் ஆட வேண்டும் என்ற போது கேரம்; மட்டையால் ஆடவேண்டும் என்று மூனைந்த போது கிரிக்கெட், வளைகோல் பந்தாட்டம், மென்பந்தாட்டம், ஆட்களைப் பிடித்து. மடக்கி, அழுத்தி விளையாட வேண்டும் என்ற போது ரக்பி, மிருக உணர்வுகளுக்குத் தீனி போடுவது போல குத்துச் சண்டை, மல்யுத்தம்.

இப்படியாக மனித ஆர்வத்திற்கு ஏற்ப விளை யாட்டுக்கள் புதிது புதிதாகப் பிறந்து கொண்டன.