பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் I 0.1

அதனால் தான். ஆயிரக்கணக்கான விளையாட்டுக் கள் தோன்றி, இன்று அகிலத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன என்றேன்.

இரண்டாயிரம் காலத்திற்கு முற்பட்ட எங்கள் காலத்தைப் பற்றி இப்பொழுது எனது சிந்தனை பறந்து போகின்றது என்று வள்ளுவர், தனது பேச்சைத் தொடங்கினார்.

அக்காலத்துத் தமிழக மக்களின் வாழ்வை நாம் இரண்டு வகையாகப் பகுத்துப் பார்க்கலாம். புறத்துறை, அகத்துறை என்பதே அவை.

பொருள் தேடுவதும், போரிடுவதும் புறத் துறையாகவும்; உறவாடுவதும், ஊடாடுவதும், உள்ளத்து செழுமையையும். இல்லத்து வளமையை யும் நாடுவது அகத்துறையாகவும் அமைந்திருந்தன.

எங்கால மக்களுக்கு இரண்டு வித வாழ்க்கைச் சூழல் இருந்தன. அது தான் போர்ச் சூழல், அதுவே சமுதாயச் சூழலாகவும் இருந்ததால் தான். நான் எழுதிய குறளிலும் அதனைத் தெளிவாகக் குறிப் பிட்டேன்.

“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எ.தனிற் கூறியது இல்’ (759)

வாழ்க்கைக்கு வேண்டியது பொருள். அந்தப் பொருளைச் செய்க என்றேன். பொருளைத்