பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் I () 3

ஒரு தூய வீரனானவன், தான் வாழ்ந்து கழித்த நாட்களையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, தன் மேல் போர்க்காயமான விழுமிய காயம் படாத நாட்களையெல்லாம், வாழ்வில் பயன்படாது வீணே கழிந்த நாள்கள் என்று நினைத்து நெஞ்சம் குலைகிறான். -

அப்படியென்றால், போர் வாழ்வே புகழ் வாழ்வு, புண்ணியம் நிறைந்த சுக வாழ்வு என்ப தாகவே வாழ்ந்தார்கள். அப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. தன் நாட்டுக்காக, தியாகம் செய்யும் தியாக உணர்வுடனே வாழ்ந்தது தான். நினைக்கும்பொழுதே நமது நெஞ்சம் செம்மாந்து களிக்கிறது.

புரந்தார் கண்ணிர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரங்து கோட்டக்க துடைத்து. (780)

தன்னை அன்பாக ஆதரித்து, அரிய பல உதவி களைச் செய்த ஆருயிர் மன்னன், போர்க் களத் திலே சாய்ந்து கிடக்கும் தன்னைக் காண வந்து, கண்ணிர் மல்க நிற்கும் காட்சி ஒன்றே, தனக்குத் தகுதியான சாவு. பெருமையான மரணம் என்று ஒவ்வொரு வீரனும் உறுதியுடன் வாழ்ந்த காலம் தான் எங்கள் காலம்.

இதனால் தான், மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் என்று பாடி மகிழ்ந்து வாழ்ந்தனர் என்று நிறுத்தினார் வள்ளுவர். -