பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் { 0 };

அதற்காக ஒவ்வொரு நாட்டினரும், தமது குடிமக்களை குடும்பத்திலிருந்தே பிரிப்பது போல, 7வயது முதலே இராணுவ வாழ்க்கை முறையில் வளர்த்தன. 7 வயது முதல் 60 வயது வரையிலும் அவர்களை போர் வாழ்க்கையில் ஈடுபட வைத் தனர். அவர்களும் தங்கள் வாழ்க்கையைத் தாய் நாட்டுக்காகத் தியாகம் செய்யவே தயாராக இருந்தனர். - - -

நீங்கள் எழுதியிருந்தீர்களே ஒரு குறள். அதற்கு உதாரணம் போலவே, அவர்களும் வாழ்ந்திருக்கின் றார்கள். -

 உறினுயி ரஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர். - (778)

தம்மை வளர்த்து ஆளாக்கிய வேந்தன், வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினாலுங் கூட, உயிர் போகும் என்று தெரிந்தும் போருக்குப் போகின்ற வேகம் குன்றாமல் புறப்படுவான் உண்மை வீரன், என்ற நமது தமிழ் வீரம், கிரேக்க வீரர்களிடமும் நிறையவே இருந்திருக்கிறது.

பிறக்கின்ற குழந்தை பிண்டமாகப் பிறந் தாலும், அதை வாளால் கீறி, பின்னர் புதைக்கின்ற நமது மரபு, அவர்களிடமும் இருந்திருக்கிறது.

குழந்தை நோய் கொண்டு பிறந்தாலும், குறை யுடன் பிறந்தாலும், அதனைக் கொண்டு போய்

வள்ளுவர்-7