பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 109

இவ்வாறு பேசிக்கொண்டே வள்ளுவர். முகத்தைப் பார்த்தேன். தொடர்ந்து சொல். லுங்கள் என்பதாக அவர் விழியசைத்தார். o

என் காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங் களை, உங்கள் மூலம் கேட்கும்போது உள்ளம் குளிர் கிறது. காலங்களில் மாற்றம்; காலத்தின் மாற்றங்க களுக்கேற்ப மக்களின் உடலில் மாற்றம், தொழில் மாற்றம், கொள்கை மாற்றம், கோட்பாட்டின் மாற்றம் எப்படி எப்படி என்பதாக நான் புரிந்து, கொள்ள உங்கள் விளக்கம் துணை புரிகிறது என்றார்.

அவரது அன்பான ஆணை, எனக்கு அளவிலா உற்சாகத்தை அளித்தது. என் விளக்கத்தைத் தொடர்ந்தேன்.

களங்களை நாம் மூன்று முக்கிய வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். பகையினைப் போக்கி, துயரினை நீக்கி, பாதுகாப்புத்தர மேற்கொள்ளும் போரினை நடத்துகிற இடம், போர்க்களம் என்று. அழைக்கப்படுகிறது.

பதர்களை நீக்கி, நெல்மணிகளைக் குவித் தெடுக்கும் இடமாக உள்ள களம், தெற்களம் என்று புகழப்படுகிறது. o,