பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . .4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

படுத்தப்பட்ட வில், வேல், வாள், கவசம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர்.

தமிழர் தம் வாழ்வும் போரையே தலையாய நோக்கமாகக் கொண்டிருந்தது. தமிழர் தம் வாழ்க்கையை சிறப்பாக விளக்க வந்த ஒரு பாடலைப் பாடுகின்றேன் என்றேன்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே ! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ! கன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ! ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ! (புறங்ானூறு 313)

நல்ல வலிமையுள்ள மக்களைப் பெற்றுத் தருவது தாயின் கடமை. அவனை வீரனாக்குதல் தந்தையின் கடமை. அந்த வீரனுக்கு வேல் செய்து தருவது கொல்லரின் கடமை. அவனுக்குப் போர்ப் பயிற்சிகளை அளிப்பது அரசனின் கடமை. இவ்வளவையும் பெற்று அஞ்சாது போர் செய்து, வெற்றி பெறுவது அந்த வீரனின் (காளை) கடமை என்பது பொருள்.

ஆமாம்! அந்நாளில் தமிழர்கள் தம் வாழ்க்கை, போர்த் தரத்திலும் திறத்திலும் தலைதுாக்கியே

நின்றது என்றார் வள்ளுவர். :