பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் f I

கிரேக்கர்கள் விளையாட்டில், வில்போட்டிகள் (Archery) இருந்தன. வேலெறியும் போட்டிகள் (Javelin Throw) @(55.56Mr. வாள் சண்டைகள் (Pencing) இருந்தன என்றேன்.

அந்த மூன்றும் தமிழர்களின் படையில் தனித் துவம் பெற்றிருந்தனவே என்றார் வள்ளுவர். இப்பொழுது எனது நினைவுக்கு வருகிறது. இந்த வில்லும், வேலும், வாளும் பற்றி என் குறளில் பல இடங்களில் பாடியிருக்கிறேன் என்றார்.

பாடுங்கள் என்று நான் கேட்பதற்கு முன்ன தாகவே, தமிழரின் வீரம் பற்றி நான் பாடிய பாடல்களைக் கேளுங்கள் என்று பாடத் தொடங் கியவர் சற்று அமைதியானார்.

இந்த மூன்று ஆயுதங்களைப் போரில் பயன் படுத்துகின்ற இடங்களை நாம் பார்க்க வேண்டும்.

மிக அருகில் நின்று போரிட, வாள் பயன் படுகிறது. சற்றுத் தொலைவில் உள்ளவர் களைத் தாக்க வேல் பயன்படுகிறது. மிகத்தொலை வில் உள்ளவர்களைத் தாக்க வில் பயன்படுகிறது.

அவர் பேச்சுக்கிடையில். வாள் வாள் என்ற சத்தம் கேட்டுத் திரும்பினோம். ஒரு நாய் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

யாரோ அதைக் கல்லால் அடித்துக் காயப் படுத்தியிருப்பார்கள் போலும், நாங்கள் ஒதுங்கிக்