பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் | 19

ஒரு பெண், தனது தலைவனைக் காண, ஏங்கிக் காத்திருக்கிறாள்.தலைவனோ வரவில்லை. வரும் வழியைப் பார்த்துப் பார்த்து, வருந்தி வருந்தி, அழுத கண்ணுடையவளாக வாழ்கிறாள். அதனால் அவள் விழியின் வாள் போன்ற ஒளி, வற்றிப் போயிற்று என்று ஒரு பாடலைப் பாடியிருக்கிறேன்.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற காளொற்றித் தேய்ந்த விரல். (1261)

தலைவன் பிரிந்து சென்ற நாட்களை எண்ணிப் பார்க்க, விரலில் தினம் கோடிட்டு சுவற்றில் தேய்த்ததால், விரலும் தேய்ந்து போயிற்று, அவர் வரவு பார்த்து வாட்டமுற்ற வாள் போன்ற விழிகள், சிறப்பான ஒளியிழந்து போயின.

வாளும் வலிமையும் ஒரு வீரனுக்கு அழகு. வலிமையில்லாதவனுக்கு வாள் ஒரு கேடா? இந்தக் கருத்தை வற்புறுத்துகிற என் குறள், என் கால இளைஞர்களின் ஏற்றமான வாழ்வு முறையையே விளக்க முற்பட்டது.

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு (762)

வன்கண் என்றால் வலிமை. வலிமையில்லாத வர்களுக்கு வாள் இருந்து என்ன பயன்! அது அவனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, படுகாயப் படுத்திவிடும். அதுபோலவே, கற்றவர் சபையில்