பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இருக்கப் பயப்படும் ஒருவருக்கு, நூல்களைக் கற்றதால் என்ன பயன் கிடைக்கும்?

அதனால் தான், வாளிருந்து என்ன பயன் என்று பாடினேன். படைக் கருவியைப் பயன் படுத்தத் தெரியாதவன் பேடி, பகடி, மக்களுள் பதர் என்றே கூறலாம் என்று விளக்கினார்.

; ; ; ; ; . தன்னாயுதமும் தன்கைப் பொருளும். பிறர்கை கொடுக்கும் பேதையும் பதரே.

என்ற ஒரு பாடல் உண்டு என்று நானும் அவ ருக்குப் பாடிக் காட்டினேன்.

ஆமாம்! வலிமையில்லாதவர் கையில் உள்ள ஆயுதம், அவரது பகைவருக்குப் போய்ச் சேரும். அந்த ஆயுதமே அவர்களின் ஆயுளுக்கு முடிவாய் போய்விடும் என்ற வள்ளுவர், வேல் பற்றிப் பேசத் தொடங்கினார்.

வேல் என்பது விசி எறியப்படுகிற போர்க் கருவி யாகும். அது சற்று தொலைவிலுள்ள பகையை அல்லது பொருளைக் குறி பார்த்து எறியப்படுவ தாகும்.

வள்ளுவர் தன் வேல் பற்றிய குறளைத் தொடர்ந்தார்.

காலாழ் களரி கரிஅடும் கண்ணஞ்சா வேல்ஆண் முகத்துக் களிறு. (500)