பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் .131

தன்னைச் செலுத்துகின்ற பாகனுக்குப் பயப் படாத கொலை வேகம் உள்ள யானை, வேல் வைத்து வீசுகின்ற போர் வீரனுக்கும் அஞ்சாமல் அவன் மீது மோதி, தன் கொம்பில் கோர்த்துக் கொண்டு வெற்றித் திமிரில் திரியும். அப்படிப்பட்ட யானை, சேற்றில் சிக்கிக் கொண்டால், சிறு நரியும் யானையை வென்று விடும். . . . . . “ . . . . ;

இந்தப் பாடலில், வேலானது, வீரன் கையில் இருக்கிறது. -

கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (774)

கையிலே படை ஆயுதமான தன் வேலினை, எதிரே பாய்ந்துவந்த யானையின் முகத்தில் வீச, அந்த யானையோ, தன் முகத்தில் ஆழமாக ஊன் றிய வேலோடு ஒடிப்போக, மீண்டும் ஒரு யானை அவ்வீரனை நோக்கி வரவே, எறிவதற்கு வேல் எதுவும் இல்லாமல், தன் மார்பிலே தைத்து நின்ற வேலினைப் பிடுங்கி, யானைமீது எறிந்து, சிரித்து மகிழ்கிறான் அந்த வீரன். -

போரிடும் மகிழ்ச்சி - வெற்றி வெறி - தன் மார்பு வேலைப் பிடுங்கி எறிகிற வேகம் -அதனால் உண்டாகும் வலி வேதனை, எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறது. மறந்து நகைக்கச் செய்கிறது. இது தான் தமிழரின் வேல் வீசும் வீரம் என்றார்.

வள்ளுவர்-8