பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்

நீங்கள் வில்லைப் பற்றி எழுதவில்லையே என்றேன். இதோ என்று தொடங்கினார். Y.

சொல் வணக்கம், வில் வணக்கம் என்று. இரண்டு சொற்களை ஒரு குறளில் கூறினேன். சொல் வணக்கம் உங்களுக்குத் தெரியும். மிகக், குழைவாக, பணிவாக, அடக்கமாகப் பேசும் நிலை .[gi

வில் வணக்கம் என்பது வில் வளைவது போன்றது. வில் வளைய வளையத்தான்

அதனுள் நுழைத்திருக்கும் அம்பிற்கு வேகம் பிறக்கும், ,

இந்த வில் வளைந்து விட்டது என்றால், அம்பு பாய்வது உறுதி. அழிப்பது திண்ணம் என்பதால் தான்; வில்லும் வணங்கும். சொல்லும் வணங்கும் என்று பாடினேன்.

ஆனால், பகைவரின் சொல்வணக்கம் கேட்டுக் குளிர்ந்து போகக்கூடாது, பகையில் வில்லின் வணக்கம் பார்த்து, அஞ்சாமலும் இருக்கக்கூடாது. என்று வில்லாளர்களின் நுண்மையைக் கூறினேன், சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க

“... வில் வணக்கம் தீங்கு குறித்தமை யான் (827) : . அதேபோல, வில்லாளர்களை, வில்லேருழவர் கள் என்று பாடினேன். அதே போல சொல்லேருழ வர்கள் என்றும் சொன்னேன் என்றார் வள்ளுவர்.

-