பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 9

உண்மை தான். உண்மைதான் என்று இரண்டு, முறை உரக்கவே கத்தி விட்டார்.

இருப்பது சாலையோரம் என்று அறிந்து, என் மூதுகை அன்போடு தட்டிக் கொடுத்து, தொண்டையைக் கனைத்துக் கொண்டார். அருவியாக அவர் பேச்சுத் தொடர்ந்தது.

தமிழர்தம் வாழ்க்கையை, தொல்காப்பியப் பெருந்தகை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை என்று இரு பிரிவாகப் பிரித்து விளக்கம் தந்தார்.

அகத்திணை என்பது தமிழர்கள் தம் இல்லற வாழ்க்கை. புறத்திணை என்பது, மக்களின் புற வாழ்க்கையை விளக்குகிறது. அதாவது, புறத் திணை ஒவ்வொன்றிலும், அமைந்துள்ள துறை யெல்லாம், அந்த காலத்து மக்கள் நடத்திய போர் முறைகளையே விளக்கின.

அதில் நாம் ஒரு குறிப்பைக் காண வேண்டும் ளங்கள் காலத்தில் இருந்த ஆடவர்க்குரிய தன்மை கள் என்ன வென்றால், ஒன்று வீரப் பெருமை. மற்றொன்று உடல் உரம்.

அவர்களது பழக்கம், வழக்கம், ஒழுக்கம் எல் லாம் அமர் கொள் மரபு. அதாவது போரில் பங்கு பெற்று வீர வாழ்வு வாழ்வது என்பதாகவே அமைந் திருந்தது. -